கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சாலைவிபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு முதுகு தண்டுவட அறுவை சிகிச்சை


கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சாலைவிபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு முதுகு தண்டுவட அறுவை சிகிச்சை
x
தினத்தந்தி 21 Oct 2023 12:15 AM IST (Updated: 21 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சாலைவிபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு முதுகு தண்டுவட அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

தூத்துக்குடி

கோவில்பட்டி (கிழக்கு):

கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சாலைவிபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு முதல்முறையாக முதுகு தண்டுவட அறுவை சிகிச்சை செய்து டாக்டர்கள் சாதனை நிகழ்த்தி உள்ளனர்.

லோடு ஆட்டோ டிரைவர்

கோவில்பட்டி இலுப்பையூரணி பஞ்சாயத்து சிந்தாமணி நகரைச் சேர்ந்த நடராஜன் மகன் பழனிச்சாமி (வயது 55). லோடு ஆட்டோ ஓட்டுநர். கடந்த மாதம் 19-ந் தேதி தோட்டிலோவன்பட்டி விலக்கு அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் காயம் அடைந்த அவர் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த எலும்பு அறுவை சிகிச்சை நிபுணர்கள் அவருக்கு முதுகு தண்டு வடத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதாக தெரிவித்தனர்.

முதுகு தண்டுவட சிகிச்சை

இதையடுத்து மருத்துவமனை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் ஆலோசனையின் பேரில், மயக்க மருந்து நிபுணர் இளங்கோ, எலும்பு முறிவு அறுவை சிகிச்சை டாக்டர்கள் பாண்டி பிரகாஷ், மோசஸ் பால், மனோஜ் குமார் மற்றும் செவிலியர்கள் கண்ணகி, சத்தியமூர்த்தி, சந்தனராஜ் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் அவருக்கு அறுவை சிகிச்சை செய்தனர். முதல்முறையாக நடந்த இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தேறியது. பழனிச்சாமியும் நலமுடன் இருக்கிறார்.

முதல் முறையாக...

இது குறித்து மருத்துவக் குழுவினர் கூறுகையில், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் லோடுஆட்டோ டிரைவருக்கு முதுகு தண்டுவட அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் நலமாக இருக்கிறார். அவர், 6 மாதங்களுக்குப் பிறகு இயல்பு வாழ்க்கையில் ஈடுபடலாம். இது போன்ற அறுவை சிகிச்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மட்டுமே செய்யப்படும். முதல்முறையாக கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ளது' என்றனர்.


Next Story