கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மேலாண்மை குழு கூட்டம்
கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடந்தது.
தூத்துக்குடி
கோவில்பட்டி:
கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு குழு தலைவர் ரெங்கம்மாள் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியை ஜெயலதா வரவேற்று பேசினார். கூட்டத்தில் குழு உறுப்பினர்கள் கவுரி, சித்ரா தேவி, உலகராணி, கஸ்தூரி கலகலட்சுமி, காளியம்மாள், முத்து முருகன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவிகளை அடுத்து தேர்வு எழுதுவதற்கு பயிற்சி கொடுப்பதற்கும், பள்ளிக்கு தேவையான கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள், அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதற்கு சம்பந்தப்பட்ட துறை மூலம் நடவடிக்கை எடுக்க முடிவெடுக்கப்பட்டது. கண்ணன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story