கோவில்பட்டி நகரசபை கூட்டம்
கோவில்பட்டி நகரசபை கூட்டம் நடந்தது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி நகரசபை சாதாரண மற்றும் அவசர கூட்டம் நடந்தது. தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார். ஆணையாளர் ராஜாராம், துணை தலைவர் ஆர்.எஸ்.ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டம் தொடங்கியவுடன் பா.ஜ.க. உறுப்பினர் விஜயகுமார் பேசுகையில், "எனது வார்டுக்கு உட்பட்ட பகத்சிங் தெரு, ஆசிரமம் தெருக்களில் சாலைகள் அமைக்கப்பட வேண்டும். சமுதாய கழிப்பிடங்களில் இலவசம் என பலகை வைக்க வேண்டும். தெற்கு பஜாரில் விபத்துகளை தடுக்க வேகத்தடை அமைக்க வேண்டும்" என்றார்.
இதற்கு பதிலளித்த ஆணையாளர், நிதி வருவதைப் பொறுத்து சாலைகள் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. தெற்கு பஜாரில் வேகத்தடை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. மேலும் சமுதாய கழிப்பிடங்களை மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள மேற்கொள்ளப்படும் என்பதால் இலவசம் என அறிவிப்பது சாத்தியமில்லை என்றார். இதையடுத்து பா.ஜ.க. உறுப்பினர் வெளிநடப்பு செய்தார்.
தொடர்ந்து நகர்மன்ற துணைத் தலைவர் ரமேஷ் மற்றும் உறுப்பினர்கள் பேசினர். பின்னர் சாதாரண கூட்டத்தில் வைக்கப்பட்ட 110 தீர்மானங்களும், அவசர கூட்டத்தில் வைக்கப்பட்ட 20 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.