சென்னிமலை முருகன் கோவிலில் 26-ந் தேதி கந்தசஷ்டி விழா தொடக்கம்; 30-ந் தேதி சூரசம்ஹாரம் நடக்கிறது
சென்னிமலை முருகன் கோவிலில் 26-ந் தேதி கந்தசஷ்டி விழா தொடங்குகிறது. 3-ந் தேதி சூரசம்ஹாரம் நடக்கிறது.
சென்னிமலை
சென்னிமலை முருகன் கோவிலில் 26-ந் தேதி கந்தசஷ்டி விழா தொடங்குகிறது. 3-ந் தேதி சூரசம்ஹாரம் நடக்கிறது.
கந்தசஷ்டி விழா
கந்த சஷ்டி கவசம் அரங்கேற்றம் செய்யப்பட்ட சென்னிமலை முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கந்த சஷ்டி திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு வருகிற 26-ந் தேதி கந்த சஷ்டி விழா தொடங்குகிறது. இதற்காக அன்று காலை 7 மணிக்கு சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் இருந்து உற்சவமூர்த்திகள் படிக்கட்டுகள் வழியாக மலைமேல் உள்ள முருகன் கோவிலுக்கு அழைத்து செல்லப்படுகிறது. அங்கு காலை 10 மணிக்கு யாகசாலை பூஜையுடன் நிகழ்ச்சிகள் தொடங்கி மகா பூர்ணாகுதி, உற்சவர் மற்றும் மூலவர் அபிஷேகம், மகா தீபாராதனை ஆகிய நிகழ்ச்சிகளும், அதனைத்தொடர்ந்து பகல் 1.30 மணிக்கு வள்ளி - தெய்வானை சாமிக்கு அபிஷேகமும் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் 5 நாட்களும் நடைபெறுகிறது. இதில் திரளான பக்தர்கள் தங்களது நேர்த்தி கடனுக்காக விரதம் இருந்து கலந்து கொள்கிறார்கள்.
சூரசம்ஹாரம்
கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 30-ந் தேதி இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. அப்போது சென்னிமலையின் 4 ராஜ வீதிகளிலும் முருகப்பெருமான் சூரர்களை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.
விழாவுக்கான ஏற்பாடுகளை செங்குந்த கைக்கோள முதலியார் கந்த சஷ்டி விழா கமிட்டியினர் செய்து வருகிறார்கள்.