அய்யனார் கோவிலில் ஆனிமாத படையல் விழா


அய்யனார் கோவிலில் ஆனிமாத படையல் விழா
x
தினத்தந்தி 26 Jun 2022 10:17 PM IST (Updated: 26 Jun 2022 11:10 PM IST)
t-max-icont-min-icon

அய்யனார் கோவிலில் ஆனிமாத படையல் விழா நடந்தது.

சிவகங்கை

சிங்கம்புணரி,

சிங்கம்புணரி அருகே எஸ்.வி. மங்கலத்தில் உள்ள ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த கூந்தலுடைய அய்யனார் பூர்ண தேவி, புஷ்கலா தேவி கோவில் உள்ளது. பாண்டிய மன்னர் காலத்தில் கட்டப்பட்ட கிராமத்து கோவிலான இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆனி படையல் விழா நடைபெறுவது வழக்கம். இந்த விழா சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக கோவிலில் மூலவர் ஒரே கல்லால் ஆன 6 அடி உயரம் கொண்ட கூந்தலுடைய அய்யனார் பூரண தேவி, புஷ்கலா தேவி மற்றும் பத்ரகாளி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பால், பழம், பன்னீர், புஷ்பம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 21 வகையான சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. மலர் மாலைகளுடன் சிறப்பு அலங் காரத்தில் கூந்தலுடைய அய்யனார் மற்றும் பத்ரகாளி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சிங்கம்புணரி பகுதி குலாலர் வம்சாவளியை சேர்ந்தவர்கள் மற்றும் சேவுகப் பெருமாள் கோவில் பூஜகர்கள், எஸ்.வி மங்கலம் கிராமத்தினர் சுமார் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை சிங்கம்புணரி குலாலர் வம்சாவளி மற்றும் சேவுகப்பெருமாள் அய்யனார் பூஜகர்கள் செய்திருந்தனர்.


Next Story