ஆனைமலையில் கொப்பரை தேங்காய் ஏலம்


ஆனைமலையில் கொப்பரை தேங்காய் ஏலம்
x
தினத்தந்தி 23 Nov 2022 12:30 AM IST (Updated: 23 Nov 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

ஆனைமலையில் கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெற்றது.

கோயம்புத்தூர்

ஆனைமலை

ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெற்றது. இதில் 75 விவசாயிகள் 517 மூட்டை கொப்பரையை பொது ஏலத்தில் விற்பனை செய்வதற்காக கொண்டு வந்தனர். காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கொப்பரை தேங்காய்களை தரம் பிரிக்கும் பணி நடைபெற்றது. இதில், 269 மூட்டைகள் முதல் ரகமாகவும், 248 மூட்டைகள் 2-வது ரகமாகவும் பிரிக்கப்பட்டது. ஏலத்தில் தாராபுரம், காங்கேயம் மற்றும் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த 13 வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

முதல் ரக கொப்பரை கிலோ ஒன்றிற்கு ரூ.80.50 முதல் ரூ.86.65 காசுகள் வரை ஏலம் போனது. 2-வது ரக கொப்பரை 65 ரூபாய் 30 காசுகள் முதல் 77 ரூபாய் 50 காசுகள் வரை விற்பனையானது. கடந்த வாரத்தைவிட 283 மூட்டைகள் அதிகரித்து இருந்தது. ஆனாலும் விலையில் மாற்றம் இல்லை. இந்த தகவலை ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் மணிவாசகம் தெரிவித்தார்.


Next Story