ெகங்கையம்மன் சிரசு திருவிழா


ெகங்கையம்மன் சிரசு திருவிழா
x

ஒடுகத்தூரில் ெகங்கையம்மன் சிரசு திருவிழா நடந்தது. இதில் திரளாக பக்தர்கள் கலந்துகொண்டனர்.

வேலூர்

அணைக்கட்டு

ஒடுகத்தூரில் உள்ள ெகங்கையம்மன் சிரசு திருவிழா நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட அம்மன் சிரசு மேளதாளத்துடன் பக்தர்கள் வெள்ளத்தில் அண்ணாநகர் பகுதியில் இருந்து ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டது. அப்போது வழிநெடுகிலும் பக்தர்கள் தேங்காய் உடைத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். அதேபோல் வீடுகள் தோறும் பக்தர்களுக்கு நீர்மோர் குளிர்பானங்கள் வழங்கப்பட்டது. மேலும் பெண்கள் சாமி ஆடியபடியும், இளைஞர்கள் சிலம்பாட்டம் கரகாட்டம் ஆடியபடி அம்மனை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.

பின்னர் சந்தை மேட்டில் உள்ள கோவிலில் வைக்கப்பட்டிருந்த சிலை மீது அம்மன் சிரசு பொருத்தப்பட்டது. பின்னர் சிறப்பு வழிபாடு செய்து கண்திறந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதனை அடுத்து பக்தர்கள் ஆடு, கோழி உள்ளிட்டவைகளை பலியிட்டு நேர்த்திக்கடனை செலுத்தினர். இதில் ஒடுகத்தூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.


Related Tags :
Next Story