கொல்லிமலையில் ஏலக்காய் செடி வளர்ப்பில் மலைவாழ் விவசாயிகள் தீவிரம்

கொல்லிமலையில்  ஏலக்காய் செடி வளர்ப்பில் மலைவாழ் விவசாயிகள் தீவிரம்
x

கொல்லிமலையில் ஏலக்காய் செடி வளர்ப்பில் மலைவாழ் விவசாயிகள் தீவிரம்

நாமக்கல்

சேந்தமங்கலம்:

நாமக்கல் மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா தலமாக கொல்லிமலை விளங்கி வருகிறது. இங்குள்ள மலைவாழ் மக்கள் காபி மற்றும் மிளகு செடிகள் பயிரிடும் விவசாயத்தில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அதற்காக சவுக்கு மரங்களை வளர்த்து அதன் மீது மிளகு செடியினை படர விட்டு அதன் பின்பு மிளகை அறுவடை செய்கின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக ஏலக்காய் செடிகளை வளர்ப்பதில் மலைவாழ் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஏலக்காய் சில ஆண்டுகள் வளர்ப்பிலேயே கிலோ ரூ.1,500 முதல் அதற்கு மேலாகவும் விற்பனை செய்யப்படுவதால் தற்போது ஏலக்காய் செடி வளர்ப்பதில் மலைவாழ் மக்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Next Story