கோடியக்கரை கடற்கரை தூய்மைப்படுத்தப்பட்டது
உலக கடற்கரை தினத்தையொட்டி கோடியக்கரை கடற்கரை தூய்மைப்படுத்தப்பட்டது.
புதுக்கோட்டை
உலக கடற்கரை தினத்தையொட்டி மணமேல்குடி கடலோர பாதுகாப்பு குழுமத்தின் சார்பில் மணமேல்குடி கோடியக்கரை கடற்கரை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது. இந்த பணியை இன்ஸ்பெக்டர் முத்துக்கனி தொடங்கி வைத்தார். தாசில்தார் ராஜா, மீன்வளத்துறை உதவி ஆய்வாளர் ஆதேஷ் மற்றும் கடலோர பாதுகாப்பு குழும போலீசார், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் ஆகியோர் இணைந்து கடற்கரை பகுதியில் இருந்த குப்பைகளை சேகரித்து அகற்றி தூய்மைப்படுத்தினார்கள். மேலும் பள்ளி மாணவர்களிடையே கடற்கரை தூய்மை பணி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
Related Tags :
Next Story