கொடநாடு விவகாரம் - குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
கொடநாடு விவகாரம் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.
சென்னை,
சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 3-வது நாள் அவை நடவடிக்கைகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.கொடநாடு விவகாரம் தொடர்பாக சட்டமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் கொண்டு வந்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:-
கொடநாடு வழக்கு சிபிசிஐடியின் கீழ் இருப்பது அனைவருக்கும் தெரியும். திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் சிபிசிஐடிக்கு உத்தரவிட்டோம். கொடநாடு வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது. விசாரணையின் முன்னேற்றம் குறித்தும் தற்போதைய நிலவரம் குறித்தும் விரைவில் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட இருக்கிறது. எனவே இந்த வழக்கில் யார் யார் தவறு செய்து இருக்கிறார்கள் என்பது குறித்து விரைவில் தெரியவரும். இந்த வழக்கில், குற்றவாளிகள் யாராக இருந்தாலும், எந்த உயரத்தில் இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.