கொடநாடு கொலை கொள்ளை வழக்கு - ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் சகோதரரிடம் சி.பி.சி.ஐடி விசாரணை
கொடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் இறந்த கனகராஜின் சகோதரர் தனபாலிடம் சி.பி.சி.ஐடி விசாரணைநடத்தினர்.
கோவை,
கோவை காந்திபுரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் காலை 10 மணிக்கு ஆஜரான அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
விசாரணைக்கு செல்வதற்கு முன் பேட்டியளித்த தனபால் கூறியதாவது ,என்னுடைய தம்பி நடந்தவற்றை என்னிடம் கூறியுள்ளார்.மொத்தம் 50 நபர்கள் இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதில் எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி, ஆத்தூர் இளங்கோ,தங்கமணி,அன்பரசு,ஜெகஜீவன்,அனுபவ் ரவி ஆகியோர் முக்கிய நபர்கள் ஆவர்.மற்ற நபர்கள் அனைவரும் இவர்களுக்கு அடுத்த நிலை குற்றவாளிகள் தான்.இவர்களிடம் விசாரணை செய்ய வேண்டும்.
இதை போலவே போலீஸ் அதிகாரிகள் ஐ.ஜி.சுதாகர்,ஓமலூர் டிஎஸ்பி சங்கீதா,எடப்பாடி இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், முன்னாள் எஸ்பிசி முத்துமாணிக்கம் ஆகியோரை விசாரணை செய்ய வேண்டும்.இவ்வழக்கில் சம்பந்தபட்டவர்களின் சொத்து மதிப்பை லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை செய்ய வேண்டும்.இதனை விசாரிக்கும் அதிகாரிகளின் சொத்து மதிப்பையும் ஆய்வு செய்யவேண்டும்.இந்த வழக்கில் இருந்து விலகி கொள்ள என்னிடம் பேரம் பேசினர்.மேலும் எனக்கு மனநிலை சரி இல்லை என்றால் மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்யுங்கள்.இதனை விட்டுவிட்டு பொய்யான குற்ற சாட்டுகளை வைக்காதீர்கள் என்று அவர் கூறினார்.