பெரியகுளம் கைலாசநாதர் கோவிலில் சித்ரா பவுர்ணமி கிரிவலம்


பெரியகுளம் கைலாசநாதர் கோவிலில் சித்ரா பவுர்ணமி கிரிவலம்
x
தினத்தந்தி 6 May 2023 2:30 AM IST (Updated: 6 May 2023 2:31 AM IST)
t-max-icont-min-icon

பெரியகுளம் கைலாசநாதர் கோவிலில் சித்ரா பவுர்ணமி கிரிவலம் நடைபெற்றது.

தேனி

பெரியகுளம் அருகே கைலாசப்பட்டியில் மலைமேல் கைலாசநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமி அன்று சிறப்பு பூஜை மற்றும் கிரிவலம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டிற்கான சித்ரா பவுர்ணமி சிறப்பு பூஜை கோவிலில் நேற்று நடைபெற்றது. அப்போது கைலாசநாதர், பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை மற்றும் அலங்காரம் நடைபெற்றது. இதில், தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் மலையை சுற்றி பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபட்டனர்.

இந்த கிரிவல நிகழ்ச்சியையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதனை பெரியகுளம் நகராட்சி முன்னாள் தலைவர் ஓ.ராஜா, டாக்டர் ரா.முத்துகுகன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழு தலைவர் வி.ப.ஜெயபிரதீப், செயலாளர் சிவக்குமார், பொருளாளர் விஜயராணி மற்றும் பராமரிப்பு குழுவினர் செய்திருந்தனர்.


Related Tags :
Next Story