ராமநாதபுரம் மன்னர் திடீர் மாரடைப்பால் மரணம்


தினத்தந்தி 24 May 2022 11:12 AM IST (Updated: 24 May 2022 11:14 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் மன்னர் ராஜாகுமரன் சேதுபதி திடீர் மாரடைப்பால் இன்று மரணமடைந்தார்.

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் சமஸ்தானத்தின் இளைய மன்னரும் ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலின் தக்காருமான ராஜாகுமரன் சேதுபதி திடீர் மாரடைப்பால் இன்று மரணமடைந்தார்.

ராமநாதபுரம் அரண்மணையில் குடும்பத்துடன் வசித்து வந்த என்.குமரன் சேதுபதி இன்று திடீர் மாரடைப்பால் காலமானாதாக தெரிகிறது.

இவர் ராமேஸ்வரம் திருக்கோயில் அறகாவலர் குழுத் தலைவர், அண்ணாமலை பல்கலைக்கழக செனட் உறுப்பினர், தஞ்சை தமிழ்ப் பழ்கலைக்கழக செனட் உறுப்பினர், ராமநாதபுரம் மாவட்ட காலந்து சங்கத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்தது குறிப்பிடதக்கது.


Next Story