கீழவைப்பார் புனித மோட்ச ராக்கினி மாதா தேர்பவனி


கீழவைப்பார் புனித மோட்ச ராக்கினி மாதா தேர்பவனி
x
தினத்தந்தி 16 Aug 2023 12:15 AM IST (Updated: 16 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கீழவைப்பார் புனித மோட்ச ராக்கினி மாதா தேர்பவனி நடந்தது.

தூத்துக்குடி

எட்டயபுரம்:

விளாத்திகுளம் அருகே உள்ள கீழவைப்பார் புனித மோட்ச ராக்கினி மாதாவின் 466-வது விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வந்தது. விழா நாட்களில் தினமும் சிறப்பு திருப்பலி, பூஜைகள், வழிபாடுகள் நடந்தன. 10-ம் நாளான நேற்று மோட்ச ராக்கினி மாதாவின் அலங்கார தேர்பவனி நடந்தது. தேரினை நூற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் வடம் பிடித்து இழுத்தனர். முக்கிய வீதிகள் வழியாக சென்ற தேரினை பின்தொடர்ந்தது ஏராளமானோர் தரையில் விழுந்து வணங்கி "கும்புடுசரணம்" போட்டுக்கொண்டே சென்றனர். தேர் ஆலயம் முன்பு சென்றடைந்ததும், பக்தர்கள் 6 அடி உயர மெழுகுவர்த்திகளை நேர்த்திக்கடனாக செலுத்தினர். இதில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்கள், சவுதிஅரேபியா, இலங்கை போன்ற வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் குடும்பத்தினருடன் வந்து அன்னையை தரிசனம் செய்தனர்.


Next Story