கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையம் 1½ மாதத்திற்குள் திறக்கப்படும் - அமைச்சர் தா.மோ. அன்பரசன்


கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையம் 1½ மாதத்திற்குள் திறக்கப்படும் - அமைச்சர் தா.மோ. அன்பரசன்
x

கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையத்தை இன்னும் 1½ மாதத்திற்குள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைப்பார் என்று அமைச்சர் தா.மோ. அன்பரசன் கூறினார்.

செங்கல்பட்டு

காஞ்சீபுரம் வடக்கு மாவட்டம் குன்றத்தூர் தெற்கு ஒன்றியத்தில் உள்ள ஆதனூர் ஊராட்சி தி.மு.க. சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பிறந்தநாள் விழாவையொட்டி பொதுக்கூட்டம், மற்றும் மூத்த தி.மு.க. நிர்வாகிகள் 70 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் பொற்கிழி வழங்கும் விழா ஆதனூர் டி.டி.சி. நகரில் நடைபெற்றது. விழாவுக்கு ஆதனூர் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்அமுதன் தலைமை தாங்கினார். குன்றத்தூர் தெற்கு ஒன்றிய தி.மு.க. மகளிர் அணி அமைப்பாளரும், ஆதனூர், கரசங்கால் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினருமான மலர்விழி தமிழ் அமுதன் அனைவரையும் வரவேற்றார். ஊராட்சி மன்ற துணைத்தலைவர் செல்வி ரவி, எஸ்.இ.டி.சி. தொழிற்சங்க முன்னாள் பொதுச்செயலாளர் வீரராகவன், ஆதனூர் ஊராட்சி கிளை செயலாளர்கள் சையத் கலீல், ஞானபிரகாசம், தமிழ்செல்வன், கவிக்குமார், அருணாகரன், பழனி, வெங்கடேசன், ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சரும், காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான தா.மோ.அன்பரசன், குன்றத்தூர் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளரும், காஞ்சீபுரம் மாவட்ட ஊராட்சி குழு தலைவருமான படப்பை ஆ.மனோகரன், தி.மு.க. செய்தி தொடர்பு இணை செயலாளர் தமிழன் பிரசன்னா, தலைமை கழக பேச்சாளர் மலர்மன்னன், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சரஸ்வதி மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். உலக மகளிர் தின விழாவையொட்டி நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற 1,000 பெண்களுக்கு அமைச்சர் சில்வர் குடம் உள்ளிட்ட பரிசு பொருட்களை வழங்கினார். கூட்டத்தில் கலந்து கொண்ட 2 ஆயிரம் பேருக்கு பிரியாணி வழங்கப்பட்டது. முன்னதாக தி.மு.க. பொதுக்கூட்டத்திற்கு வருகை தந்த அமைச்சர் தா.மோ.அன்பரசனுக்கு ஆதனூர் ஊராட்சி மன்ற தலைவர் டி.தமிழ்அமுதன் வெள்ளி செங்கோல் நினைவு பரிசு வழங்கினார். இதில் ஆதனூர் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் சுந்தர், வசந்தி, நதியா என்கிற தியாகு, ஜெயந்தி, சுமதி, கலைச்செல்வி, இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணியை சேர்ந்த அமைப்பாளர்கள் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் டி.டி.சி. நகர் கிளை செயலாளர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.

கூட்டத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது:- கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையத்தை இன்னும் 1½ மாதத்திற்குள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைப்பார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தியாகத்தால் உழைப்பால் உருவான தலைவர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story