பள்ளி மாணவி கடத்தல்
பள்ளி மாணவி கடத்தல்
விழுப்புரம்
விழுப்புரம்
விழுப்புரம் கே.கே.சாலை பகுதியை சேர்ந்த 17 வயதுடைய மாணவி, கோனூரில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்ற மாணவி, வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் பெற்றோர் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர், விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரில், தங்கள் மகளை விழுப்புரம் அருகே கருங்காலிப்பட்டை சேர்ந்த முருகன் மகன் சந்தோஷ்(வயது 25) என்பவர் ஆசைவார்த்தை கூறி கடத்திச்சென்று விட்டதாக கூறியிருந்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடத்தப்பட்ட மாணவியையும், அவரை கடத்திச்சென்ற சந்தோசையும் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story