கொண்டலாம்பட்டி அருகே கல்லூரி மாணவி கடத்தல்; போக்சோவில் வாலிபர் கைது
கொண்டலாம்பட்டி அருகே கல்லூரி மாணவியை கடத்திய வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
கொண்டலாம்பட்டி,
சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள கல்பாரப்பட்டியை சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மகன் மோகன் (வயது 20). இவர், அதே ஊரைச் சேர்ந்த திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி., கம்ப்யூட்டர் பிரிவில் முதலாம் ஆண்டு படித்து வரும் 17 வயது மாணவியை கடந்த ஒரு ஆண்டாக ஆசை வார்த்தை கூறி காதலித்து உள்ளார். இதனிடையே கடந்த 4 நாட்களுக்கு முன்பு அந்த மாணவியை அவர் கடத்தி சென்று விட்டதாக மாணவியின் பெற்றோர் கொண்டலாம்பட்டியில் உள்ள மல்லூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் மோகன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வி வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.
இதனிடையே மாணவியும், வாலிபரும் கொண்டலாம்பட்டியில் ஒரு இடத்தில் இருப்பதாக தகவல் கிடைத்ததும், அங்கு சென்று மாணவியை மீட்டதுடன், வாலிபர் மோகனை போலீசார் கைது செய்தனர். அந்த மாணவி பெற்றோரிடம் செல்ல மறுத்ததால் சேலத்தில் உள்ள மகளிர் காப்பகத்துக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.