கேரள மருத்துவக் கழிவுகள் கொட்டப்படும் விவகாரம்: முற்றிலும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - நீதிபதிகள்
தமிழகத்தில் பிற மாநில மருத்துவ கழிவுகள் கொட்டுவதை முற்றிலும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ஐகோர்ட்டு மதுரை கிளை தெரிவித்துள்ளது.
மதுரை,
கேரளாவில் இருந்து தமிழ்நாட்டில் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதாக தென்காசியை சேர்ந்த சிதம்பரம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், மருத்துவக் கழிவுகள் கொட்டுவதை தடுக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. கேரள மருத்துவக் கழிவுகள் கொட்டப்படும் விவகாரத்தில் தென்காசியில் 9 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு உள்ளது. கேரள எல்லையோர மாவட்டங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது என்று தெரிவிக்கபட்டது.
இதையடுத்து நீதிபதிகள், பிற மாநில மருத்துவக்கழிவுகள் தமிழ்நாட்டில் கொட்டப்படுவதை முற்றிலும் தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக்கூறி விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
Related Tags :
Next Story