கேரளா வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல் - ஒரே நாளில் 9,790 பேருக்கு சிகிச்சை
வைரஸ் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை கேரள சுகாதாரத்துறை தீவிரப்படுத்தியுள்ளது.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலத்தில் தற்போது வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த 2 வாரங்களில் இரு மடங்காக அதிகரித்துள்ளது.
கடந்த 4 நாட்களில் மட்டும் கேரள மருத்துவமனைகளில் வைரஸ் காய்ச்சலுக்காக சுமார் 30 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். மாநிலம் முழுவதும் நேற்று ஒரே நாளில் மட்டும் 9,790 பேர் வைரஸ் காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்றுள்ளனர்.
இதையடுத்து வைரஸ் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை கேரள சுகாதாரத்துறை தீவிரப்படுத்தியுள்ளது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளவும் கேரள சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
Related Tags :
Next Story