கீழடியில் அகழாய்வு, அருங்காட்சியக கட்டிடப் பணிகள்
கீழடியில் அகழாய்வு, அருங்காட்சியக கட்டிடப் பணிகளை அரசு முதன்மை செயலாளர் ஆய்வு செய்தார்.
திருப்புவனம்,
கீழடியில் அகழாய்வு, அருங்காட்சியக கட்டிடப் பணிகளை அரசு முதன்மை செயலாளர் ஆய்வு செய்தார்.
ஆய்வு
திருப்புவனம் யூனியனைச் சேர்ந்த கொந்தகை கிராமத்திற்கு உட்பட்ட பகுதியில் கட்டப்பட்டு வரும் புதிய அகழ் வைப்பக அருங்காட்சியக கட்டிடப் பணிகள் மற்றும் கீழடி அகழாய்வு பணிகளை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமையில் பொதுப்பணித்துறை அரசு முதன்மை செயலாளர் மணிவாசன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர் கூறியதாவது:- தமிழர்களின் 2,600 ஆண்டுகளுக்கு முன்பான வரலாற்றினை அறிந்து கொள்வதற்கான தடயங்கள் அகழ்வாராய்ச்சி மூலம் கண்டெடுக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் மூலம் கிடைக்கும் பொருட்களை உலகத் தமிழர்கள் அனைவரும் பார்வையிடு வதற்கு ஏதுவாக தமிழக அரசு சார்பில் ரூ. 12.21 கோடி மதிப்பீட்டில் 7 பிரிவுகளாக கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. அந்த பணிகளும் நிறைவுபெறும் தருவாயில் உள்ளது. கட்டிடப் பணிகள் முழுமையாக நிறைவு பெற்றவுடன் பொருட்களை காட்சிப்படுத்துவதற்கான பணிகள் நடைபெறும்.
அகழ் வைப்பகம்
இந்த பணிகளும் முழுமையாக நிறைவு பெற்ற பின்பு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அகழ் வைப்பக கட்டிடத்தை திறந்து வைக்க உள்ளார். கீழடியில் நடைபெற்று வரும் 8-ம் கட்ட அகழாய்வு பணிகள் தொடர் பாக துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப் பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது பொதுப்பணித்துறை மதுரை மண்டல தலைமை பொறியாளர் ரகுநாதன், கண்காணிப்பு பொறி யாளர் சத்தியமூர்த்தி, செயற்பொறியாளர் மணிகண்டன், கீழடி தொல்லியல் துறை இணை இயக்குனர் ரமேஷ், கீழடி ஊராட்சி தலைவர் வெங்கடசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.