காயாமொழி ராமநாதபுரம் சுடலைமாட சுவாமி கோவில் கொடை விழா


காயாமொழி ராமநாதபுரம் சுடலைமாட சுவாமி கோவில் கொடை விழா
x
தினத்தந்தி 22 Aug 2023 12:15 AM IST (Updated: 22 Aug 2023 10:20 AM IST)
t-max-icont-min-icon

காயாமொழி ராமநாதபுரம் சுடலைமாட சுவாமி கோவில் கொடை விழா இன்று நடக்கிறது.

தூத்துக்குடி

திருச்செந்தூர் அருகே காயாமொழியில் உள்ள ராமநாதபுரம் சுடலைமாட சுவாமி உடனுறை இசக்கி அம்மன் கோவிலில் 39-வது வருசாபிஷேகம், கொடை விழா கடந்த 15-ந்தேதி கால்நாட்டுதலுடன் தொடங்கியது. நேற்று இரவில் குடியழைப்பு பூஜை நடந்தது.

விழாவின் சிகர நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) கொடை விழா நடைபெறுகிறது. இதையொட்டி காலை 8 மணிக்கு சுனைநீர் தீர்த்தம் எடுத்து வரப்படுகிறது. காலை 11 மணிக்கு கும்ப பூஜை, யாக பூஜையை தொடர்ந்து கோவில் விமானத்துக்கு புனிதநீர் ஊற்றி வருசாபிஷேகம் நடக்கிறது.

மதியம் 2 மணிக்கு மஞ்சள் பால் நீராட்டு நடைபெறும். இரவு 10 மணிக்கு அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது. இரவு 1 மணிக்கு சாமக்கொடை, படைப்பு தீபாராதனையை தொடர்ந்து பக்தர்களுக்கு அருள்வாக்கு வழங்கப்படுகிறது.

நாளை (புதன்கிழமை) காலை 6 மணிக்கு பக்தர்களுக்கு வரி பிரசாதம் அளிக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்துள்ளனர்.


Next Story