காட்பாடியில் மகளிர் போலீஸ் நிலையம்


காட்பாடியில் மகளிர் போலீஸ் நிலையம்
x

காட்பாடியில் மகளிர் போலீஸ் நிலையத்தை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

வேலூர்


தமிழகத்தில் 20 மகளிர் போலீஸ் நிலையங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதில் காட்பாடி போலீஸ் நிலைய வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மகளிர் போலீஸ் நிலையத்தையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

இதனையடுத்து காட்பாடி மகளிர் போலீஸ் நிலையத்தில் வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன், கதிர் ஆனந்த் எம்.பி., டி.ஐ.ஜி ஆனிவிஜயா, வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர்.

இதில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.


Next Story