உப்பிலியபுரம் பகுதிகளில் குறுவை நெல் அறுவடை பணி
உப்பிலியபுரம் பகுதிகளில் குறுவை நெல் அறுவடை பணி நடந்தது.
திருச்சி
உப்பிலியபுரம்:
உப்பிலியபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில், கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் பயிரிடப்பட்ட இரண்டாம் பருவ குறுவை நெல் விளைச்சலையடுத்து, அறுவடை பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. சன்னரக நெல் வகைகள், பெருவெட்டு ரக நெல் என சுமார் 8 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட நெல் வயல்களில் அறுவடை நடைபெறுகிறது. இதைெயாட்டி கோட்டப்பாளையம், வைரிசெட்டிப்பாளையம், உப்பிலியபுரம், சோபனபுரம், எரகுடி, ஆலத்துடையான்பட்டி, பச்சபெருமாள்பட்டி, தங்கநகர், நாகநல்லூர், முருங்கப்பட்டி, பி.மேட்டூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், அப்பகுதியில் அரசின் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story