கரூர்: குளித்தலை அருகே வீரணம்பட்டி காளியம்மன் கோயிலுக்கு வைக்கப்பட்ட சீல் அகற்றம்..!


கரூர்: குளித்தலை அருகே வீரணம்பட்டி காளியம்மன் கோயிலுக்கு வைக்கப்பட்ட சீல் அகற்றம்..!
x

கரூர், குளித்தலை அருகே வீரணம்பட்டி காளியம்மன் கோயிலுக்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டது.

கரூர்,

கரூர் மாவட்டம், தரகம்பட்டி அருகே வீரணம்பட்டியில் பிரசித்தி பெற்ற காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் கடந்த 7-ந்தேதி நடந்த திருவிழாவில் ஒரு தரப்பினரை கோவிலுக்குள் அனுமதிப்பது தொடர்பாக இருதரப்பினர் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து 8-ந்தேதி நடந்த பேச்சுவார்த்தையின்போது, ஒரு தரப்பினர் கோவிலுக்குள் சென்று கரகத்தை எடுத்து கிணற்றில் கரைத்தனர். இதனால் இருதரப்பினருக்கும் பிரச்சினை ஏற்பட்டது.

இதையடுத்து குளித்தலை கோட்டாட்சியர் புஷ்பாதேவி தலைமையிலான அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கோவிலை பூட்டி சீல் வைத்தனர். இதையடுத்து கலெக்டர் பிரபுசங்கர் இரு தரப்பினர் அழைத்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வந்த நிலையில் பேச்சுவார்த்தை சுமூக முடிவு எட்டப்பட்டது. அதையடுத்து இன்று கோவில் திறப்பதற்கு முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று வீரணம்பட்டி காளியம்மன் கோவிலை திறக்க கரூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தர வதனம் ஆகியோர் வருகை தந்தனர். காளியம்மன் கோயிலுக்கு வைக்கப்பட்ட சீலை கலெக்டர் பிரபு சங்கர் அகற்றினார். சீல் வைக்கப்பட்ட பூட்டை திறப்பதற்கு முறையான சாவி இல்லாததால் போலீசார் உதவியுடன் பூட்டை கடப்பாரை மற்றும் சுத்தியால் உடைத்து கோவிலுக்குள் சென்றனர்.

அபிஷேகம் செய்வதற்கு ஒரு தரப்பினர் மட்டுமே உள்ளே வந்தனர். மற்றொரு தரப்பினர் வெளியே அமைதியாக காத்திருந்தனர். இதையடுத்து காளியம்மனுக்கு அபிஷேகம், சிறப்பு தீபாதாரனை காட்டப்பட்டது. இதில் பட்டியலின இளைஞர் மற்றும் ஊர் மக்கள் கலெக்டர் பிரபு சங்கர் சாமி தரிசனம் செய்தனர்.


Next Story