கருணாநிதி நூற்றாண்டு விழா போட்டிகள் காரைக்குடியில் நாளை நடக்கிறது
கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி போட்டிகள் காரைக்குடியில் நாளை நடக்கிறது.
காரைக்குடி
கருணாநிதி நூற்றாண்டு விழாவினையொட்டி தி.மு.க. மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவையின் சார்பில் உயர்நிலைப்பள்ளி, மேல் நிலைப்பள்ளி வகுப்பு மாணவர்களுக்கான கருணாநிதி எழுதிய கவிதை, திரைப்பட வசனம் ஒப்புவித்தல் போட்டி நாளை(புதன்கிழமை) காலை 9 மணியளவில் காரைக்குடி முத்துப்பட்டணம் வித்யாகிரி மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுகிறது..இப்போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ- மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.3 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது. போட்டிகளை தி.மு.க. கலைஞர் இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநில செயலாளர் வண்ணை அரங்கநாதன் தொடங்கி வைக்கிறார். பரிசளிப்பு விழா நிகழ்ச்சிக்கு முன்னாள் அமைச்சர் தென்னவன் தலைமை தாங்குகிறார். காரைக்குடி நகர்மன்ற தலைவர் முத்துத்துரை முன்னிலை வகிக்கிறார்.தி.மு.க. நகரச்செயலாளர் குணசேகரன் வரவேற்றார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் பரிசுகளை வழங்குகிறார். இதற்கான ஏற்பாடுகளை தி.மு.க. கலை இலக்கிய பகுத்தறிவு பேரவையில் சிவகங்கை மாவட்ட தலைவர் திருநாவுக்கரசு, மாவட்ட துணைத்தலைவர் காரை சுரேஷ், மாவட்ட அமைப்பாளர் சண்முகநாதன் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.