கருணாநிதி பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்


கருணாநிதி பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்
x
தினத்தந்தி 14 Jun 2023 12:15 AM IST (Updated: 14 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருவேங்கடம் அருகே கருணாநிதி பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது.

தென்காசி

திருவேங்கடம்:

தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருவேங்கடம் அருகே இளையரசனேந்தலில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவர் பத்மநாபன் தலைமை தாங்கினார். ஒன்றிய அவைத் தலைவர் செந்தில்வேல், கடற்கரை, கனகராஜ், மாயகிருஷ்ணன், முத்தையா, மனோகரன், பொன் சீனி, முத்துச்சாமி, கணேசன், செல்வி பாலசுப்பிரமணியன், கருப்பசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். குருவிகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் கிறிஸ்டோபர் வரவேற்றார். குருவிகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் சேர்மதுரை தொகுப்புரை வழங்கினார்.

தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்துகொண்டு 1500 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றினார். தனுஷ்குமார் எம்.பி. தமிழக அரசின் சாதனைகளை விளக்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் சங்கை சரவணன், மாவட்ட துணைச் செயலாளர்கள் ராஜதுரை, புனிதா, பொதுக்குழு உறுப்பினர்கள் மாரிச்சாமி, பராசக்தி, ஒன்றிய செயலாளர்கள் லாலா சங்கரபாண்டியன், கடற்கரை, பெரியதுரை, நகர செயலாளர் அந்தோணிசாமி, பேரூர் கழக செயலாளர் வாசுதேவநல்லூர் பாலசுப்பிரமணியன், திருவேங்கடம் மாரிமுத்து, திருவேங்கடம் பேரூராட்சி கவுன்சிலர்கள் மகேஸ்வரன், கணேசன், குருவிகுளம் கலைச்செல்வன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அருண் நன்றி கூறினார். ஏற்பாடுகளை நக்கலமுத்தன்பட்டி பஞ்சாயத்து தலைவர் குணசேகரன் செய்திருந்தார். முன்னதாக ராஜா எம்.எல்.ஏ. முன்னிலையில் முக்கூட்டுமலை பஞ்சாயத்து தலைவர் முனீஸ்வரி தி.மு.க.வில் இணைந்தார்.


Next Story