கருணாநிதி பிறந்தநாள் விழா


கருணாநிதி பிறந்தநாள் விழா
x

குன்னூர், கோத்தகிரியில் கருணாநிதி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

நீலகிரி

குன்னூர்

குன்னூர், கோத்தகிரியில் கருணாநிதி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

கருணாநிதி பிறந்தநாள்

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்தநாள் விழா, குன்னூரில் நகர தி.மு.க. இளைஞரணி சார்பில் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் தலைமை தாங்கினார். தமிழக வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், மாநில சிறுபான்மை பிரிவு செயலர் அன்வர்கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குன்னூர் அரசு லாலி ஆஸ்பத்திரி அருகே கட்சி கொடியேற்றி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. விழாவிற்கான ஏற்பாடுகளை குன்னூர் நகர இளைஞரணி அமைப்பாளர் மு.பத்மநாபன் மற்றும் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

நலத்திட்ட உதவிகள்

இதேபோன்று கோத்தகிரி அருகே கொணவக்கரை கிராமத்தில் நடைபெற்ற விழாவிற்கு கோத்தகிரி ஒன்றிய செயலாளர் நெல்லை கண்ணன் தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் ஜெயபிரியா ஹரிகரன் கலந்துக்கொண்டு ஏழை, எளிய மக்கள் 100 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் துணைத்தலைவர் பிரவீன், கவுன்சிலர்கள் மற்றும் கலந்துக்கொண்டனர்.

குஞ்சப்பனை கிராமத்தில் ஊராட்சி தலைவர் இம்மானுவேல் மணிகண்டன் தலைமையிலும், அரவேனு பஜார் பகுதியில் ஜக்கனாரை ஊராட்சி தலைவர் சுமதி சுரேஷ் தலைமையிலும், கோடநாடு பகுதியில் ஊராட்சி தலைவர் சுப்பி காரி தலைமையிலும், தேனாடு பகுதியில் ஊராட்சி தலைவர் ஆல்வின் தலைமையிலும் தி.மு.க.வினர் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இது தவிர கோத்தகிரி காமராஜர் சதுக்கம், ராம்சந்த் சதுக்கம், பஸ் நிலைய பகுதிகளிலும் கருணாநிதி உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும் அரக்கம்பை கிராமத்தில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் நடுஹட்டி ஊராட்சி தலைவர் அரக்கம்பை கிருஷ்ணன் தலைமையில் 100 சோலை மர நாற்றுக்கள் நடவு செய்யப்பட்டன.


Next Story