பிளஸ்-2 பொதுத்தேர்வில் காரை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சாதனை


பிளஸ்-2 பொதுத்தேர்வில் காரை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சாதனை
x

பிளஸ்-2 பொதுத்தேர்வில் காரை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் சாதனை புரிந்தனர்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, காரை கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வு எழுதிய மாணவ-மாணவிகள் 78 பேரில், 75 பேர் தேர்ச்சி பெற்றனர். இதனால் பள்ளி 96.25 சதவீதம் தேர்ச்சி பெற்றது. பள்ளியின் முதல் மதிப்பெண் 574-ஐ மதுபாலன் என்ற மாணவர் பெற்று சாதனை படைத்தார். வேதியியல் பாடத்தில் 5 மாணவர்களும், வேளாண் அறிவியல் பாடத்தில் ஒரு மாணவியும் 100-க்கு 100 மதிப்பெண் பெற்று சாதனை படைத்தனர். வேதியியல் பாடத்தில் 9 மாணவ-மாணவிகளும், உயிரியியல் பாடத்தில் ஒரு மாணவியும், இயற்பியல் பாடத்தில் ஒரு மாணவரும் 99 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். சாதனை புரிந்த மேற்கண்ட மாணவ-மாணவிகளையும், அவர்கள் சாதனை பெற உறுதுணையாக இருந்த ஆசிரியர்களையும் பள்ளி தலைமை ஆசிரியர் அக்பர் கான், உதவி தலைமை ஆசிரியரும், வேதியியல் ஆசிரியருமான தனபால், ஆசிரியர்கள், பள்ளி மாணவ-மாணவிகள் உள்பட பலர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.


Next Story