அரசு பள்ளி மாணவர்களுக்கு கபசுர குடிநீர்


அரசு பள்ளி மாணவர்களுக்கு கபசுர குடிநீர்
x
தினத்தந்தி 10 Oct 2023 12:45 AM IST (Updated: 10 Oct 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

கூடலூர் அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

நீலகிரி

கூடலூர் தாலுகா புளியம் பாரா அரசு தொடக்க மற்றும் உயர்நிலைப்பள்ளியில் ஏராளமான மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். தற்போது காய்ச்சல் உள்பட பல்வேறு நோய்கள் பரவி வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதைக் கருத்தில் கொண்டு அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கு கபசுர குடிநீரை வழங்கினர். நிகழ்ச்சியில் பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் சங்கர் உள்பட ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story