கங்களாஞ்சேரி வெட்டாறு கதவணை


கங்களாஞ்சேரி வெட்டாறு கதவணை
x
தினத்தந்தி 21 Jun 2023 12:15 AM IST (Updated: 21 Jun 2023 3:16 PM IST)
t-max-icont-min-icon

கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால் கங்களாஞ்சேரி வெட்டாறு கதவணை வர்ணம் பூசப்பட்டு புதுப்பொலிவுடன் காணப்படுகிறது.

திருவாரூர்

பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த 12-ந்தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த காவிரி நீர் தஞ்சை மாவட்டம் கல்லணைக்கு வந்தடைந்தது.

பின்னர் கல்லணையில் இருந்து திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்ட பாசனத்திற்காக ஆறுகளில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆறுகளில் தண்ணீர் திறக்கப்பட்டதால் தடுப்பணைகள், மதகுகள் பராமரிப்பு பணி செய்யப்பட்டு வர்ணம் பூசப்பட்டு வருகிறது.

புதுப்பொலிவுடன் கதவணைகள்

இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் கங்களாஞ்சேரி வெட்டாற்றில் உள்ள கதவணைகள் அனைத்தும் பராமரிப்பு பணி செய்யப்பட்டு வர்ணம் பூசப்பட்டு புதுப்பொலிவுடன் தயார் நிலையில் உள்ளது.

இதேபோல் நன்னிலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கதவணைகளிலும் பராமரிப்பு பணிகள் முடிவடைந்து தண்ணீருக்காக காத்துக்கிடக்கின்றன.


Next Story