காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவில் பிரம்மோற்சவ விழா


காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவில் பிரம்மோற்சவ விழா
x

காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவில் பிரம்மோற்சவ விழா வருகிற 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

காஞ்சிபுரம்

பிரம்மோற்சவ விழா

காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவில் மகா சக்தி பீடங்களிலும் ஒன்றாக திகழ்கிறது. இந்த கோவிலுக்கு தமிழ்நாடு ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் இருந்து நாள் தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து அம்மனை மனமுருகி தரிசனம் செய்கின்றனர்.

இப்படி புகழ்பெற்ற இந்த கோவிலில் இந்த ஆண்டு மாசி மாத பிரம்மோற்சவம், நாளை மறுநாள் (சனிக்கிழமை) அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. நாளை (வெள்ளிக்கிழமை) பகல் சண்டிஹோமம், இரவு வெள்ளி மூஷிக வாகன புறப்பாடு நடைபெறுகிறது.அன்று முதல் அம்பாள் பகல், இரவு என இரு வேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு ராஜ வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

விடையாற்றி திருவிழா

அந்த வகையில் 25-ந்தேதி பகல் வெள்ளி விருஷபம், இரவு தங்க மான் வாகனம், 26-ந் தேதி பகல் மகரம், இரவு சந்திர பிரபை, 27-ந்தேதி பகல் தங்க சிம்ம வாகனம், இரவு யானை வாகனம், 28-ந்தேதி பகல் தங்க சூரிய பிரபை, இரவு தங்க அம்ச வாகனம், மார்ச் 1 -ந்தேதி பகல் தங்க பல்லக்கு, இரவு நாக வாகனம், 2-ந்தேதி பகல் முத்து சப்பரம், இரவு தங்க கிளி வாகனம், 3-ந்தேதி பகல் ரதம், 4-ம் தேதி காலை பத்ரபீடம், இரவு குதிரை வாகனம், 5-ம் தேதி பகல் ஆள்மேல் பல்லக்கு, இரவு வெள்ளி ரதம், 6-ந்தேதி பகல் சரபம், இரவு கல்பகோத்யானம், 7- ந்தேதி இரவு தங்க காமகோடி விமானம், 8-ந்தேதி பகல் விஸ்வரூப தரிசனம், இரவு விடையாற்றி திருவிழாவுடன் பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது.

விழாவையொட்டி பந்தல் அமைக்கும் பணி நடந்து வருகிறது. சன்னதி தெருவில் போக்குவரத்ததுக்கு இடையூறாக இருந்த சாலையோரஆக்கிரமிப்பு கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றினர்.

விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சீனிவாசன், கோவில் ஸ்ரீ கார்யம் சுந்தரேச அய்யர் மற்றும் கோவில் பணியாளர்கள், அர்ச்சகர்கள் செய்து வருகின்றனர்.


Next Story