காமராஜர் பிறந்தநாள் விழா
காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது
சிவகிரி:
சிவகிரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் காமராஜர் பிறந்தநாளையொட்டி தென்காசி மாவட்ட காங்கிரஸ் ஓ.பி.சி. தலைவர் திருஞானம் அன்னதானத்தை தொடங்கி வைத்தார். மாலையில் காமராஜர் உருவப்படத்திற்கு மாவட்ட தலைவர் பழனிநாடார் எம்.எல்.ஏ. மரியாதை செலுத்தி மாணவ-மாணவிகளுக்கு நோட்டு புத்தகம், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். நாடார் உறவின் முறை நாட்டாமை ராமமூர்த்தி வரவேற்றார். மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் குருசாமி பாண்டியன், மாநில பொதுக்குழு உறுப்பினர் கணேசன், நகர தலைவர் சண்முகசுந்தரம், தொகுதி ஓ.பி.சி. தலைவர் காந்தி, நகர பொருளாளர் விநாயகர், வட்டார செயலாளர் மருதப்பன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். நாடார் உறவின்முறை செயலாளர் தர்மராஜ் நன்றி கூறினார்.
* இனாம் கோவில்பட்டி பஸ்நிறுத்தம் அருகே நாடார் உறவின்முறை மடத்திற்கு முன்பு அலங்கரிக்கப்பட்ட காமராஜர் உருவப்படத்திற்கு பழனி நாடார் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் காமராஜர் சப்பர பவனி நடைபெற்றது. காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாடசாமி, பொருளாளர் காளியப்பன், பிரதிநிதி பால்ராஜ், வட்டார தலைவர் மகேந்திரன், கவுன்சிலர் செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
* கீழப்பாவூர் கிழக்கு, மேற்கு வட்டார பகுதிகளில் நடந்த நிகழ்ச்சிகளில் பழனிநாடார் எம்.எல்.ஏ. கட்சி கொடி ஏற்றினார். வட்டார தலைவர்கள் தங்கரத்தினம் ஆகியோர் தலைமை தாங்கினர். சேசுஜெகன், மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் முரளிராஜா, சுரண்டை நகராட்சி தலைவர் எஸ்.பி.வள்ளிமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பேச்சாளர் எஸ்.ஆர்.பால்துரை, மாவட்ட கவுன்சிலர் சுப்பிரமணியன், ஒன்றிய கவுன்சிலர்கள் ராதாகுமாரி, மேரி கனகஜோதி, தொண்டன் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
* செங்கோட்டை டிரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்பட்டது. இதையொட்டி மாணவ-மாணவிகள் தென்காசி புதிய பஸ்நிலையத்தில் இருந்து கல்வி மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தினர். தென்காசி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். சப்-இன்ஸ்பெக்டர் கற்பகராஜ், கம்பீரம் பி.பாலசுப்பிரமணியம், தி.மு.க. மாநில இளைஞர் அணி துணை செயலாளர் ஷெரீப் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை பள்ளியின் தலைவர் முகமது பண்ணையார், தாளாளர் ஷேக் செய்யது அலி வழி ஆகியோர் நடத்தினர். பேரணியில் பொதுமக்களுக்கு துணிப்பைகள் வழங்கப்பட்டது.