காமராஜர் பிறந்த நாள் விழா
சுரண்டை கல்லூரியில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
தென்காசி
சுரண்டை:
சுரண்டை காமராஜர் அரசு கலை கல்லூரியில் காமராஜா் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. சுரண்டை இந்து நாடார் மகமை கமிட்டி நாட்டாண்மை தங்கையா நாடார் தலைமை தாங்கினார். சுரண்டை நகராட்சி தலைவர் வள்ளி முருகன், ஆலங்குளம் ஒன்றிய கவுன்சிலர் முரளி ராஜா, நகர காங்கிரஸ் தலைவர் எஸ்.கே.டி.ஜெயபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காமராஜர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. சுரண்டை நகராட்சி கவுன்சிலர் ராஜகுமார், சிவகுருநாதபுரம் இந்து நாடார் மகமை கமிட்டி உறுப்பினர்கள் ஏ.கே.எஸ்.டி.சேர்மன், மாதாளபாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சுரண்டை அருகே கழுநீர்குளத்தில் கிராம பஞ்சாயத்து தலைவர் முருகன் தலைமையில் காமராஜர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
Related Tags :
Next Story