காமராஜர் பிறந்த நாள் விழா


காமராஜர் பிறந்த நாள் விழா
x
தினத்தந்தி 16 July 2023 12:15 AM IST (Updated: 16 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை, காரைக்குடியில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. காரைக்குடியில் காமராஜர் சிலைக்கு மாங்குடி எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

சிவகங்கை

காரைக்குடி

சிவகங்கை, காரைக்குடியில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. காரைக்குடியில் காமராஜர் சிலைக்கு மாங்குடி எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

காமராஜர் சிலைக்கு எம்.எல்.ஏ. மரியாதை

காமராஜர் பிறந்தநாளையொட்டி காரைக்குடியில் உள்ள அவரது சிலைக்கு மாங்குடி எம்.எல்.ஏ. தலைமையில் காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் இளைஞர் காங்கிரசார் சார்பில் வழங்கப்பட்ட விளையாட்டு பொருட்களை காரைக்குடி தெற்கு தெரு நகர மன்ற பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மாங்குடி எம்.எல்.ஏ. வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் நகர காங்கிரஸ் தலைவர் பாண்டி மெய்யப்பன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் குமரேசன், மாவட்டச் செயலாளர் அப்பாவு ராமசாமி, மாநில வக்கீல் பிரிவு இணைச் செயலாளர் ராமநாதன், உஞ்சனை ஊராட்சி மன்ற தலைவர் ராம அருணகீதன் அம்பலம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

காரைக்குடி ராமநாதன் செட்டியார் நகர்மன்ற உயர்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழாவையொட்டி நடைபெற்ற கல்வி வளர்ச்சி நாள் விழாவில் காரைக்குடி நகர் மன்ற தலைவர் முத்துத்துரை சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளுக்கும், வினாடி-வினா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் நகர் மன்ற உறுப்பினர்கள் பிலோமினா, மைக்கேல், கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சிவகங்கை

சிவகங்கை நகர் காங்கிரஸ் கமிட்டி சார்பில் கர்மவீரர் காமராஜரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி தலைமையிலும் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜசேகரன் முன்னிலையிலும் சிவகங்கையில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. விழாவில் நகர தலைவர் குரு.கணேசன், மாவட்ட செயலாளர் த.கணேசன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் பார்வதி பாலு, வீரகாளை நகரத் துணைத் தலைவர் துரை பிரபு, ராம்குமார் ஓட்டல் பாண்டியன், முருகேசன், சுப்பிரமணியன், விக்னேஷ், ரஞ்சித்குமார் மற்றும் வார்டு தலைவர்கள் கலந்து கொண்டனர்.

கீழச்சிவல்பட்டி

கீழச்சிவல்பட்டி ஆர்.எம்.மெய்யப்பச் செட்டியார் மெட்ரிக் பள்ளியில் காமராஜரின் பிறந்தநாள் கல்வி வளர்ச்சிநாள் விழாவாக கொண்டாடப்பட்டது. விழாவிற்கு சிங்கம்புணரி தாசில்தார் சாந்தி தலைமை தாங்கினார். பள்ளித்தாளாளர் எஸ்.எம்.பழனியப்பன் முன்னிலை வகித்தார். விழாவின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தில்லி கம்பன் கழகத் தலைவர் பெருமாள் பேசினார். இதில் காங்கிரஸ் கட்சியின் மாவட்டத்தலைவர் சத்தியமூர்த்தி, முன்னாள் ஊராட்சிமன்ற துணைத் தலைவர் செல்வமணி, ஏ.ஐ.எம். அறக்கட்டளைத் தலைவர் சைமன் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக பள்ளிச் செயலர் குணாளன் அனைவரையும் வரவேற்றார். பள்ளி முதல்வர் பழனியப்பன் நன்றி கூறினார்.

பரிசுகள்

கோட்டையூர் ஸ்ரீராம் நகர் ஸ்ரீசுப்பையா அம்பலம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற காமராஜர் பிறந்த நாள் மற்றும் கல்வி வளர்ச்சி தின விழாவிற்கு பள்ளியின் தாளாளர், முன்னாள் எம்.எல்.ஏ. சுப.துரைராஜ் தலைமை தாங்கினார். பள்ளியின் முதல்வர் ராஜேஸ்வரி ஜெகதீஷ் காமராஜரின் சாதனைகள் பற்றி சிறப்புரையாற்றினார். பொய்யலூர் ஊராட்சி, பாடத்தான்பட்டி ஊராட்சி மன்ற உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற காமராஜர் பிறந்த நாள் விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் திவ்யநாதன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ராதிகா முன்னிலை வகித்தார். விழாவையொட்டி பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பாடல், கவிதை, பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. ஆசிரியர் வெங்கடேஷ் நன்றி கூறினார்.


Next Story