'காங்கிரஸ், தி.மு.க.வின் நட்சத்திர பேச்சாளர் கமல்ஹாசன்' - பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் விமர்சனம்


காங்கிரஸ், தி.மு.க.வின் நட்சத்திர பேச்சாளர் கமல்ஹாசன் - பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் விமர்சனம்
x

காங்கிரஸ் மற்றும் தி.மு.க.வின் நட்சத்திர பேச்சாளராக கமல்ஹாசன் இருப்பதாக வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார்.

கோவை,

கர்நாடக மாநிலத்தில் வரும் மே மாதம் 10-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அங்கு பல்வேறு அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் அழைப்பை ஏற்று, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கர்நாடகத்திற்குச் சென்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், கோவையில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், 'காங்கிரஸ், தி.மு.க. போன்ற கட்சிகளுடன் சேர்ந்து கொண்டு மாற்றத்தை தரப்போகிறேன் என்று சொன்னால், கமல்ஹாசனின் அரசியல் கணக்கு என்ன? அவரை ஒரு கட்சியின் தலைவராக பார்க்க முடியாது. தேர்தல் பிரச்சாரத்திற்கு ஒவ்வொரு துறையைச் சேர்ந்தவர்களை அழைத்து வருவதைப் போல், காங்கிரஸ் மற்றும் தி.மு.க.வின் நட்சத்திர பேச்சாளராக கமல்ஹாசன் இருக்கிறார்" என்று வானதி சீனிவாசன் தெரிவித்தார்.



Next Story