காமாட்சி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா


காமாட்சி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா
x
தினத்தந்தி 13 Aug 2023 1:00 AM IST (Updated: 13 Aug 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

காமாட்சி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா நடந்தது.

மயிலாடுதுறை

செம்பனார்கோவில் அருகே கிடாரங்கொண்டான் ஊராட்சி சங்கிருப்பு கிராமத்தில் பழமையான குமளமேட்டு காமாட்சி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் அருள்பாலித்து வரும் அம்மனை குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் விளக்கேற்றி வழிபாடு செய்தால் விரைவில் குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பது ஐதீகம். பல்வேறு சிறப்புகளை கொண்ட இக்கோவிலில் ஆடி கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி நேற்று முன்தினம் தீமிதி திருவிழா நடந்தது. இதில் அலகு காவடி, சக்தி கரகம் மற்றும் குழந்தைகளை தோளில் சுமந்து வந்து பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதியுலா நடந்தது. விழாவையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை செம்பனார்கோவில் போலீசார் மற்றும் பூம்புகார் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் குழுவினர் செய்து இருந்தனர்.


Next Story