கள்ளக்குறிச்சி கலவரம்: பள்ளியை மறுசீரமைப்பு செய்ய அனுமதி வழங்கி கலெக்டர் உத்தரவு
கள்ளக்குறிச்சி கலவரத்தில் சேதமடைந்த பள்ளியை மறுசீரமைப்பு செய்ய அனுமதி வழங்கி மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்தார். இது தொடர்பாக நடந்த போராட்டத்தின் போது கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தின் போது போலீஸ் வாகனங்களுக்கு தீ வைத்து கொளுத்தியது மற்றும் பள்ளி பொருட்களை சேதப்படுத்தினர். இது கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி, தொடர்ந்து கைது நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் கலவரத்தின் போது சிதைந்து போன பள்ளியை சீரமைப்பது தொடர்பான அனுமதியை வழங்கி மாவட்ட கலெக்டர் ஷர்வன் குமார் ஜடாவத் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், மாவட்ட நிர்வாகத்தினால் நியமிக்கப்படும் அலுவலர் மற்றும் காவல்துறை கண்காணிப்பில் பள்ளியின் மறுசீரமைப்பு செய்ய 45 நாட்கள் அனுமதி வழங்கியும், பள்ளி கட்டடங்களை மறுசீரமைப்பு தவிர இதர பணிகளை மேற்கொள்வது ஐகோர்ட்டு உத்தரவுக்கு உட்பட்டது என்று உத்தரவிட்டுள்ளார்.