கள்ளக்குறிச்சி: பெருமாள் கோவிலில் 100 ஆண்டுகளுக்கு பிறகு பட்டியலின மக்கள் சாமி தரிசனம்...!


கள்ளக்குறிச்சி: பெருமாள் கோவிலில் 100 ஆண்டுகளுக்கு பிறகு பட்டியலின மக்கள் சாமி தரிசனம்...!
x

கள்ளக்குறிச்சியில் உள்ள பெருமாள் கோவிலில் 100 ஆண்டுகளுக்கு பிறகு பட்டியலின மக்கள் சாமி தரிசனம் செய்தனர்.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டம் எடுத்துவாய்நத்தம் கிராமத்தில் பழமையான வரதராஜ பொருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் சுமார் 100 ஆண்டுகளாக பட்டியலின மக்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை என்று கூறப்படுகின்றது.

இதனால் கோவிலுக்குள் தங்களை தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் பட்டியலின மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர். இதனை அடுத்து கோவில் நிர்வாகிகளிலம் பேச்சுவார்தை நடத்தி பின்னர், பலத்து போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துவாய்நத்தம் வரதராஜ பொருமாள் கோவிலில் சுமார் 100 ஆண்டுகளுக்கு பிறகு பட்டியலின மக்கள் இன்று சாமி தரிசனம் செய்தனர்.


Next Story