கள்ளழகர் கோவில் ராஜகோபுரம் கும்பாபிஷேகம்- அடுத்த மாதம் நடக்கிறது


கள்ளழகர் கோவில் ராஜகோபுரம் கும்பாபிஷேகம்- அடுத்த மாதம் நடக்கிறது
x

கள்ளழகர் கோவில் ராஜகோபுரம் கும்பாபிஷேக விழா அடுத்த மாதம் நடக்கிறது.

மதுரை

அழகர்கோவில்,

கள்ளழகர் கோவில்

மதுரை அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாகும். இக்கோவிலில் ராஜகோபுரத்திற்கு கும்பாபிஷேகம் அடுத்த மாதம் 23-ந் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து கோவில் தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி ஆகியோர் கூறியிருப்பதாவது:-

ரூ.2 கோடி திட்ட மதிப்பீட்டில் பழமை மாறாமல் புதுப்பொலிவுடன் கும்பாபிஷேகத்திற்கு திருப்பணிகள் நிறைவு பெற்று ராஜகோபுரம் தயாராக உள்ளது. கி.பி. 1558-ம் ஆண்டு விஜயநகர பேரரசர் காலக்கட்டத்தில் இக்கோவில் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆழ்வார்களால் மங்களாசாசனம் பாடப்பெற்ற தலமாக விளங்கி வருகிறது.

கும்பாபிஷேகம்

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா முதல் ஒவ்வொரு விழாக்களின் போதும் மதுரை மட்டுமில்லாது பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வந்து செல்வது வழக்கமாக உள்ளது. சுண்ணாம்பு, கருப்பட்டி கடுக்காய் உள்ளிட்ட கலவைகள் அடைக்கப்பட்டு பழங்கால முறைப்படி திருப்பணிகள் நடைபெற்று உள்ளது.

இந்த ராஜகோபுரம் 628 சிற்பங்களை தாங்கி பிரமாண்டமாக காட்சியளிக்கிறது. 120 அடி உயரம் கொண்ட கள்ளழகர் கோவில் ராஜகோபுரம் 7 திருநிலைகளைக் கொண்டது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story