காளியம்மன் கோவில் வருசாபிஷேக விழா


காளியம்மன் கோவில் வருசாபிஷேக விழா
x
தினத்தந்தி 2 July 2023 12:30 AM IST (Updated: 2 July 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

காளியம்மன் கோவில் வருசாபிஷேக விழா நடைபெற்றது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி நாடார் உறவின் முறை சங்கத்திற்கு பாத்தியப்பட்ட காளியம்மன் கோவில் வருசாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி காலை 6 மணிக்கு சங்கல்பம், விக்னேஸ்வர பூஜை, புண்யாக வாசனம், கும்ப பூஜை, வேதபாராயணம், சக்தி ஹோமம் தொடர்ந்து பரிவார மூர்த்தி களுக்கு மூல மந்திரஹோமம், பூர்ணாகுதி, மகா அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் காளியம்மன் கோவில் விமான கோபுரங்கள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் தூத்துக்குடி செல்வம் பட்டர் குழுவினரால் நடத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் நாடார் உறவின்முறை சங்க தலைவர் ஏ.பி.கே. பழனிச்செல்வம், துணை தலைவர் செல்வராஜ், பொருளாளர் சுரேஷ்குமார், கோவில் தர்மகர்த்தா மாரியப்பன், பொருளாளர் மாணிக்கம் மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

பின்னர் ஈ.வே.அ.வள்ளி முத்து நாடார் இளைஞர் அணி சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 7 மணிக்கு மேல் நாடார் மொத்த வியாபாரிகள் மண்டகபடிதாரர்கள் சார்பில் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி சிம்ம வாகனத்தில் காளியம்மன் வீதிஉலா வருதல் நடைபெற்றது.


Next Story