காளியம்மன் கோவில் வருசாபிஷேக விழா
சிவகிரி அருகே காளியம்மன் கோவில் வருசாபிஷேக விழா நடைபெற்றது.
தென்காசி
சிவகிரி:
சிவகிரி அருகே தட்டாங்குளம் காளியம்மன் கோவிலில் வருசாபிஷேக விழா நடைபெற்றது. இதைமுன்னிட்டு கோவில் முன்பு யாகசாலைகள் அமைக்கப்பட்டு, வேத மந்திரங்கள் ஓதப்பட்டு வருசாபிஷேகம் நடந்தது. பின்னர் அம்மன் உள்பட பரிவார தெய்வங்கள் தலைமலை வீரப்பன், பேச்சியம்மன், கன்னி விநாயகர், கருப்பசாமி, மாரியம்மாள், பார்வதி, மாரியம்மன், சின்ன காளியம்மன் ஆகியவற்றிற்கு விபூதி, குங்குமம், சந்தனம், பன்னீர், எலுமிச்சை நீர், இளநீர் உள்பட 18 வகையான நறுமண பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. சந்தன காப்பு அலங்காரத்தில் பட்டாடைகள், மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு தீபாராதனை காட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பவுர்ணமி பூஜை வழிபாட்டு குழுவினர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story