கலாஷேத்ரா பாலியல் துன்புறுத்தல் விவகாரம்: தவறான தகவல்களை பரப்பவேண்டாம்.. கூடுதல் காவல் ஆணையர் பேட்டி


கலாஷேத்ரா பாலியல் துன்புறுத்தல் விவகாரம்: தவறான தகவல்களை பரப்பவேண்டாம்.. கூடுதல் காவல் ஆணையர் பேட்டி
x

பேராசிரியர் உள்ளிட்ட 4 பேர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும் எனவும் மாணவிகள் குரல் கொடுத்து வருகின்றனர்.

சென்னை,

சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் உள்ள பேராசிரியர் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது. பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக மாணவர்கள் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய கலாசார அமைச்சகத்திற்கு மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பியுள்ளனர். மேலும், பேராசிரியர் உள்ளிட்ட 4 பேர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும் எனவும் மாணவிகள் குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், கலாஷேத்ரா கல்லூரியில் பாலியல் துண்புறுத்தல் விவகாரத்தில் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சிம்ஹா அளித்துள்ள பேட்டியில் தெரிவித்து உள்ளார்.

மேலும், பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக இதுவரை எழுத்துப்பூர்வமான புகார் எதுவும் வராததால், போலீஸ் விசாரணை தொடங்கப்படவில்லை என்று அவர் தெரிவித்தார். மாணவிகள் இதுதொடர்பாக எழுத்துப்பூர்வ புகார் அளித்தால், அதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.


Next Story