காஞ்சீபுரம் ராஜகுபேரர் கோவிலில் கலசபூஜை


காஞ்சீபுரம் ராஜகுபேரர் கோவிலில் கலசபூஜை
x

காஞ்சீபுரம் ராஜகுபேரர் கோவிலில் செல்வ செழிப்புக்காக கலச பூஜைகள் நடைபெற்றது.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரத்தை அடுத்த வெள்ளகேட் பகுதியில் ராஜகுபேரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆங்கில புத்தாண்டையொட்டி 27 நட்சத்திரங்களையும் வழிபடும் விதமாக 27 கலசங்கள் வைக்கப்பட்டு பக்தர்களின் குடும்ப மகிழ்ச்சி, ஆரோக்கியம், கடன் நிவர்த்தி மற்றும் செல்வ செழிப்புக்காக கலச பூஜைகள் நடைபெற்றது.

இதையடுத்து ராஜகுபேரருக்கு கலசாபிஷேகம், 32 வகையான அபிஷேகம் மற்றும் தனாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் ராஜகுபேரர் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். கோவிலில் அன்னதானமும் நடைபெற்றது. முன்னதாக கோவிலில் அமைந்துள்ள நவநிதிப்படிகளுக்கும் சிறப்பு தீபாராதனைகளை கோவில் நிர்வாக அறங்காவலர் ராஜகுபேர சித்தர் சுவாமிகள் நடத்தினார்.


Next Story