கலைஞர் நூற்றாண்டு கிரிக்கெட் போட்டி
தூத்துக்குடியில் கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு நடந்த கிரிக்கெட் போட்டியை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி மீளவிட்டான் பெரியசாமி திடலில் நேற்று கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வடக்கு மாவட்ட தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமை தாங்கினர். சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
தி.மு.க. ஆட்சியில் விளையாட்டு போட்டிகள் மூலம் இளைஞர்கள் ஒருங்கிணைக்கப்படுகின்றனர். சில இளைஞர்கள் போதை பொருட்களுக்கு அடிமையாகி தடம் மாறிச் செல்வதை தடுக்க, இது போன்ற விளையாட்டு போட்டிகள் மிகுந்த உறுதுணையாக இருக்கிறது. மேலும், எல்லாத்துறைகளிலும் தமிழகம் முன்னேற்றம் அடைவது போல் விளையாட்டுத் துறையும் சிறந்து விளங்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து கிரிக்கெட் வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன.