கடையநல்லூர் பெரிய பள்ளிவாசல் கந்தூரி விழா


கடையநல்லூர் பெரிய பள்ளிவாசல் கந்தூரி விழா
x
தினத்தந்தி 3 Feb 2023 12:15 AM IST (Updated: 3 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கடையநல்லூர் பெரிய பள்ளிவாசல் கந்தூரி விழா கொடியேற்றம் நடந்தது.

தென்காசி

கடையநல்லூர்:

கடையநல்லூரில் உள்ள பிரசித்தி பெற்ற செய்யது மக்தூம் பெரிய பள்ளிவாசல் கந்தூரி விழா ஆண்டு தோறும் நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 23-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. விழாவில் நேற்று கொடி ஊர்வலம் பகல் 2 மணிக்கு தொடங்கியது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட யானையில் பிறைக்கொடி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கடையநல்லூரில் முக்கிய வீதிகளில் வழியாக வலம் வந்து, இரவில் தர்கா வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து ராத்திபு மஜ்லீஸ், சந்தனம் பூசுதல் நடைபெற்றது. இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 7 மணிக்கு தீப அலங்காரம், நாளை (சனிக்கிழமை) மாலை 5 மணி அளவில் மவுலூது ஷரீப் ஓதுதல், நாளை மறுநாள் நேர்ச்சை வினியோகம் செய்யப்படுகிறது. ஏற்பாடுகளை தர்கா பரம்பரை இனாம்தார் செய்து வருகின்றனர். கடையநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சப்- இன்ஸ்பெக்டர் கணேஷ் ராம் உள்பட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story