கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்த மாற்றுக்கட்சியினர்


கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்த மாற்றுக்கட்சியினர்
x
தினத்தந்தி 14 Aug 2023 6:45 PM GMT (Updated: 14 Aug 2023 6:45 PM GMT)

கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. முன்னிலையில் மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டியிலுள்ள தூத்துக்குடி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் நேற்று மீனாட்சிபுரம், உருளைகுடி, பீக்கிலிப்பட்டி பகுதியைச் சேர்ந்த மாற்றுக் கட்சியினர் 50 க்கும் மேற்பட்டவர்கள் அ.தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி ஒன்றிய செயலாளர் அன்புராஜ் ஏற்பாட்டில் நடந்தது. வடக்கு மாவட்ட செயலாளர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. முன்னிலையில் மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.வில் இணைந்தனர். இவர்களுக்கு வேட்டி- சேலைகளை எம்.எல்.ஏ. வழங்கினார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய துணை செயலாளர் மணிராஜ், நகர செயலாளர் விஜயபாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், ஆவின்பால் உற்பத்தியாளர் சங்க தலைவர் தாமோதரன், எட்டயபுரம் நகரச் செயலாளர் ராஜகுமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story