நாமக்கல்லில் மாநில கபடி போட்டிமத்திய மந்திரி எல்.முருகன் தொடங்கி வைத்தார்


நாமக்கல்லில் மாநில கபடி போட்டிமத்திய மந்திரி எல்.முருகன் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 13 Jan 2023 12:15 AM IST (Updated: 13 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

விவேகானந்தர் பிறந்தநாள் மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாமக்கல் கிழக்கு மாவட்ட பா.ஜனதா இளைஞர் அணி சார்பில் மாநில அளவிலான கபடி போட்டி நாமக்கல்லில் தொடங்கியது. இந்த போட்டியை மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் தகவல் ஒளிபரப்புத்துறை இணை மந்திரி எல்.முருகன் தொடங்கி வைத்தார்.

போட்டியில் நாமக்கல், மதுரை, கோவை, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 40 அணிகள் பங்கேற்று விளையாட உள்ளன. முதல் பரிசை பெறும் அணிக்கு ரூ.30 ஆயிரம், 2-வது பரிசை பெறும் அணிக்கு ரூ.20 ஆயிரம், 3-ம் பரிசு பெறும் அணிக்கு ரூ.15 ஆயிரம், 4-ம் பரிசு பெறும் அணிக்கு ரூ.10 ஆயிரம் மற்றும் கோப்பை வழங்கப்பட இருப்பதாக போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்தனர். போட்டி நடுவராக சிலம்பரசன் செயல்பட்டார்.

இந்த தொடக்கவிழா நிகழ்ச்சியில் மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம், நாமக்கல் கிழக்கு மாவட்ட இளைஞர் அணி தலைவர் ராம்விலாஸ் பிரபு மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.


Next Story