நகை பறித்த வாலிபருக்கு 2 ஆண்டு ஜெயில்


நகை பறித்த வாலிபருக்கு 2 ஆண்டு ஜெயில்
x

சிவகாசியில் நகை பறித்த வாலிபருக்கு 2 ஆண்டு ெஜயில் தண்டனை விதிக்கப்பட்டது.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி டவுன் போலீஸ் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு குட்டியனைஞ்சான் தெருவை சேர்ந்த கந்தசாமி மனைவி சுந்தரி (வயது 62) என்பவர் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் சுந்தரி கழுத்தில் கிடந்த 9 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பி ஓடி விட்டார். இந்த சம்பவம் குறித்து சுந்தரி, டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி சாத்தூர் நந்தவனப்பட்டியை சேர்ந்த ஞானபிரகாசம் (23) என்பவரை கைது செய்தனர். பின்னர் இந்த வழக்கு சிவகாசி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1-ல் நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராஜேஷ்கண்ணன், நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட ஞானபிரகாசத்துக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1000 அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார். சிவகாசியில் நகை பறித்த வாலிபருக்கு 2 ஆண்டு ெஜயில் தண்டனை விதிக்கப்பட்டது.


Related Tags :
Next Story