நீதி நிலை நாட்டப்பட்டது - பொன்முடி சிறை தண்டனை குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்


நீதி நிலை நாட்டப்பட்டது -  பொன்முடி சிறை தண்டனை குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
x
தினத்தந்தி 21 Dec 2023 11:56 AM IST (Updated: 21 Dec 2023 12:27 PM IST)
t-max-icont-min-icon

சொத்துகுவிப்பு வழக்கில் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சொத்துக் குவிப்பு வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் குற்றவாளிகள் என தீர்ப்பளித்த சென்னை ஐகோர்ட்டு அவர்களுக்கான தண்டனை விவரங்களை இன்று அறிவித்தது. அதன்படி, இந்த வழக்கில் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு தலா ரூ.50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது, ஊழல் செய்ததை அதிகாரத்தின் மூலம் சாட்சிகளை அழித்தும், நீதிபதிகளுக்கு அழுத்தம் கொடுத்தும் மிரட்டியும் வழக்கில் இருந்து விடுதலை பெற்றதற்கு உயர் நீதிமன்றம் சரியான தீர்ப்பை வழங்கியுள்ளது. இதன்மூலம் நீதி நிலை நாட்டப்பட்டுள்ளது. செந்தில்பாலாஜிக்கு அடுத்து பொன்முடிக்கு தண்டனை கிடைத்துள்ளது. மேலும் பல திமுகவினர் சிறைக்கு செல்வர். திமுகவை பொறுத்தவரை இது அவர்களுக்கு சிறைக்காலம் ஆகும். ஊழல் கட்சி என்றாலே தி.மு.க, மேலும் ஊழல் செய்ததற்காக கலைக்கப்பட்ட அரசு திமுக அரசு ஆகும். திமுகவினர் வரிசையாக சிறைக்கு செல்லும் காலம் உருவாகியுள்ளது, என்று கூறினார்.


Next Story