பெண் தறித்தொழிலாளி கொலை வழக்கில் பெண்ணுக்கு ஆயுள் தண்டனை நாமக்கல் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு


பெண் தறித்தொழிலாளி கொலை வழக்கில்   பெண்ணுக்கு ஆயுள் தண்டனை  நாமக்கல் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
x

பெண் தறித்தொழிலாளி கொலை வழக்கில் பெண்ணுக்கு ஆயுள் தண்டனை நாமக்கல் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு

நாமக்கல்

நாமக்கல்:

பள்ளிபாளையம் அருகே பெண் தறித்தொழிலாளி கொலை வழக்கில் பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதித்து நாமக்கல் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

தறித்தொழிலாளி

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள ஆவாரங்காட்டை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவருடைய மனைவி புஷ்பா (வயது 40). தறித்தொழிலாளி. இவரது பேரனை அதே பகுதியை சேர்ந்த சின்னப்பொண்ணு என்பவர் கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14-ந் தேதி தாக்கியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சின்னபொண்ணுவிடம் புஷ்பா தட்டி கேட்டுள்ளார். அதில் ஏற்பட்ட தகராறில், சின்னப்பொண்ணு, புஷ்பாவை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு கீழே தள்ளி அவரது கழுத்தை நெரித்துள்ளார். இதில் மயங்கி விழுந்த புஷ்பா ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

ஆயுள் தண்டனை

இந்த சம்பவம் தொடர்பாக பள்ளிபாளையம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து சின்னபொண்ணுவை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு நாமக்கல் மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வக்கீல் விஜயபாரதி வாதாடினார். இதனிடையே இந்த வழக்கின் விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதில் புஷ்பாவை கொலை செய்த சின்னபொண்ணுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5,500 அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து சின்ன பொண்ணு சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story